Print Dispatch·Scribbles

நீ ஏன் மத்தவங்க மாதிரி இல்லை

·2 min·241 words·[Scribbles]
நீ ஏன் மத்தவங்க மாதிரி இல்லை
BySaadh Jawwadh
Published
2 Min Read · 241 Words
நீ ஏன் மத்தவங்க மாதிரி இல்லை
Plate 01 — நீ ஏன் மத்தவங்க மாதிரி இல்லைArchive Illustration

"ஒருத்தர நீங்க ஏன் மத்தவங்க மாதிரி இல்லை" என்று கேட்குறது எவ்வளவு பெரிய வன்முறை என்கிறதை ஏன் யாருமே புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்க?


முக்கியமா parents அந்தப் பிள்ளை மத்த பிள்ளைகளோட பழக ஆரம்பிக்கிற அந்த நாளில் இருந்து...
"நீ ஏன் அந்தப் பிள்ளை போல நல்லா இருக்க மாட்டேங்குற", "அந்தப் பிள்ளையை பாரு எப்படி சமத்தா இருக்கு, நீயும் அப்படி இருக்கணும்", "அந்தப் பிள்ளையை பாரு எப்படி நல்லா படிக்குது", "நீ ஏன் மற்ற பிள்ளை போல marks வாங்க மாட்டேன் என்கிற", "நீ ஏன் அந்த பக்கத்து வீட்டு பிள்ளை போல கிளாஸ் போக மாட்டேங்குற", "உன்ன தலைமுடி ஏன் அந்த பிள்ளை தலமுடிய போல நீளமாய் இல்லை"...

இப்படி compare பண்ணி பண்ணியே ஒரு generation எயே வளர்த்திட்டாங்க...

இப்படி வளர்ந்து வந்த generation தனக்கு கூட இருக்கிற நண்பன், classmate தொடங்கி தனக்கு கூட வேலை செய்ற சக ஊழியன் வரைக்கும் பார்க்கிற, பழகுற எல்லாரையும் தனக்கு போட்டியாவே பார்க்க ஆரம்பிச்சிட்டு.

அவனைவிட நான் கூட marks எடுக்கனும் தொடங்கி, இவன விட பெரிய phone, அவன விட பெரிய சம்பளம், இப்படி மத்தவனுக்காகவே ஓடிக்கிட்டு இருக்கு இந்த generation. இந்த generation கிட்ட ஒரு மனிஷனுக்கு இன்னொரு மனுஷன் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவி செய்யற பழக்கமே இல்லாம போயிருச்சு...

நிற்க.

ஏன்பா! இந்த உலகம் ரொம்ப அழகானது, இதுல உனக்கு நீ மட்டும் தான் போட்டி நேற்றையஉன்னை விட நீ better ஆனாலே போதும். எல்லாருமே அவங்க அவங்களுக்கான பாதையில போயிட்டு இருக்காங்க நீ உனக்கான பாதையில் போ. முடிஞ்சா கூட ஒரு ரெண்டு பேர கூட்டுப்போ.

உன்னோட தூரம், உன்னோட தேவை இதைப் பொறுத்து தான் உனக்கான வாகனம் இருக்கணுமோ ஒழிய மத்தவர்களுக்காக இருக்க கூடாது. இங்கு யாருமே ஒரே மாதிரி வாழ்வதில்லை அவங்க அவங்க face பண்ற சூழ்நிலை அவங்கவங்களுக்கு வேறானது. So, வேற வேற பாதையில் போறவங்க எப்படிப்பா போட்டியாக முடியும்?

இப்படிச்சொல்லி ஒரு அழகான generation எ நாம ஏன் உருவாக்க கூடாது அப்படிங்கிற ஒரு கேள்வி; இல்ல ஒரு ஆசை எனக்கு.

திரும்பவும் சொல்றேன் "ஒருத்தர நீங்க ஏன் மத்தவங்க மாதிரி இல்லை" என்று கேட்கிறது ஒரு வன்முறை.

Share this article

Generate a story card or copy link to clipboard

Clip & Syndicate Dispatch

Share this dispatch or export a print story card

Continued in This EditionPrint Index