Dowryism

ஒரு uncle call பண்ணி கேட்டாரு, "என் மகளுக்கு ஒரு மாப்பிள்ளை வந்துருக்கு, அதை பத்தி கொஞ்சம் உனக்கு தெரியுமா மகன்?
ஏதும் போதை, சிகரெட், சாராயம்னு வேறு ஏதும் கெட்ட பழக்கங்கள் இருக்கிறதா? அதைப் பற்றி கொஞ்சம் தெரியப்படுத்த இயலுமா?"
"இவன் கிட்ட வேற ஒண்ணும் இல்ல uncle, ஆனா உங்கள போல 'dowry' வாங்குவான்" என்று சொல்லிப்போட்டு வச்சிட்டேன்.
திரும்ப call எடுத்து, "நம்மட புள்ளையிலயும் சில குறைகள் இருக்கிறதானே... நம்மட புள்ளைக்கும் அல்லாஹ் தந்த சில குறைகள் இருக்கே, தானே? அப்படி இருக்கும் போது, எங்களுக்குள்ள நாம இந்த Dowry-ய வச்சுத்தானே அதையும் ஈடுசெய்யப் பார்க்கணும்" என்று சொல்றாரு.நிற்க.
அந்த பிள்ளையை அந்த குறையோட பாக்காம, அந்த குறையையும் நிறைவா பாக்கிற ஒருவனைத்தானே இப்படியான பிள்ளைகளுக்கு மாப்பிள்ளையா எடுக்கணும் நீங்க? அப்படி இல்லைண்டா, காசை கொடுத்து மாப்பிள்ளையை எடுத்தா, காசுக்கு வாரவன் நாளைக்கு அதே விஷயத்தை சுட்டிக்காட்டிப் பேசுவான், அந்த வாழ்க்கை நிறைவா அமையாது. இதுல உங்களுக்கு என்ன சந்தேகம் இருக்கு?
Dowry-அ நியாயப்படுத்துறதுக்கு இதெல்லாம் ஒரு காரணமா? ஹராம், ஹராம் தானே! வட்டி வாங்குறது இல்லை, போதை எடுக்குறது இல்லைனு பெருமை பேசுறீங்க... ஆனா, இந்த டவுரி மட்டும் என்ன, ஹலாலா?
என்னடா நீங்க? குடுத்து குடுத்து குடுத்து, வாங்கி வாங்கி வாங்கி, ஒரு கேவலங்கெட்ட அமைப்புல கிடக்கு. கொஞ்சம் கூட்டாளிமார்கள் உட்கார்ந்து set பண்ணி plan போடுறானுங்க...
எப்படி? எங்க? எவ்வளவு? எண்டு... தூ... sorry, வாய்க்கு பூச்சி போயிட்டு.
இந்த ஹராத்துல start ஆகுற ஒரு உறவு, இந்த காசுல start ஆகுற ஒரு உறவு நல்ல வகையில நீடிக்கும்னு எப்படி நினைக்கிறீங்க?
இன்னும் கொஞ்சம் பேர் நம்மகிட்ட இருக்கு தானே நம்முடைய பிள்ளைக்கு தானே எழுதப்போரம்... 🤦🏼
Share this article
Generate a story card or copy link to clipboard

Saadh Jawwadh
Dowryism
Fake Science: How Predatory Publishers Exploiting Academic Trust
Exclusivity is necessity; not a choice.