அமைதியும் தனிமையும்

அமைதியும் தனிமையும் என் உற்ற நண்பர்கள், யாரும் இல்லா என் உலகில் வழித்துணைகள்,
பயணங்களின் அழகு வழித்துணை தானே!
ஒரு குறை...
அவர்கள் இலகுவில் கோபித்துக் கொள்வார்கள்,
வழியில் நான் சில புதிய நண்பர்களை கண்டு
உரையாட நின்று விட்டாள் கொணக்கு எடுப்பார்கள்.
முதலில் தனிமை கோவிப்பாள், ஓடி விடுவாள்
புதிய நண்பர்களின் பவுசில் அவளைக்கண்டு கொள்ள மாட்டேன்,
தொடரே... அமைதியும் கோபித்துக் கொள்வாள்,
அவளும் ஓடிவிடுவாள்,
தனிமையின் கோபம் சில நாட்களே நீடிக்கும் தேடி வருவாள், அனைத்துக் கொள்வாள்;
ஆனால் அமைதி இல்லா தனிமை கொடுமையானது...
அமைதியோ கொஞ்சம் அதிக கோபக்காரி, இலகுவில் வரமாட்டாள் வறுத்தி எடுப்பாள், பாடம் கற்பிப்பாள்,
தனிமை மட்டும் கூடவே இருப்பாள்,
ஆனால் அமைதி இல்லா தனிமை வலி நிறைந்தது...
சில நாட்கள் இழுத்து விட்டு மீண்டும் வருவாள்;
அமைதி எனும் உற்ற நண்பி,
இப்போது அமைதியும் தனிமையும்.
தனிமையில் அமைதி அற்புதமானது,
அது சிந்தனைகளை சிற்பிப்பது,
அது படைப்பின் பிறப்பிடம்,
அது டெஸ்லாவும் தேடியது,
அது அமைதியுடன் கூடிய தனிமை.
அமைதியும் தனிமையும் என் உற்ற நண்பர்கள்...