தோத்தது யாரு?

ஒரு election நடக்குது. அந்த election-ல எங்கட வாப்பாவும், அவருக்குக் கூட இன்னொரு ஆளும் ஒரே இடத்துல இருந்து போட்டி போடுறாங்க.
அந்த இன்னொரு ஆள், ஒரு நடக்கவே சாத்தியமில்லாத பொய்யான fear-mongering-ஐ வச்சு, "இந்த ஊரப் பிடிச்சிருவாங்க, அது செஞ்சிருவாங்க, இது செஞ்சிருவாங்க" என்றதை வச்சு ஒரு பிரச்சாரம் நடத்துறாரு. எங்கட வாப்பா, அந்த ஊரச் சுத்தி உள்ள பிரச்சினைகளுக்கான solutions-ஐ முன்வச்சு ஒரு பிரச்சாரத்தை நடத்துறாரு.
Election முடியுது. மக்கள் அந்த மற்ற நபரை வெகுவா ஆதரிச்சு, அவரு அந்த election-ல வெல்றாரு. எங்கட வாப்பா அந்த election-ல வெல்லல. நான் தோத்துட்டாரு அப்படின்னு சொல்ல விரும்பல; ஏன்னா, அந்த election ஏன் எனக்கு வெற்றி என்கிறதக் கதைக்கிறதுதான் இந்தப் பதிவு.
இப்ப, அந்த election-ல மத்தவரு பிரச்சாரம் செஞ்ச எந்த ஒரு விஷயமுமே, அந்தப் பயத்துக்குரிய எந்த ஒரு விஷயமுமே கடைசி வரைக்கும் நடக்கல. அதேபோல, எங்கட வாப்பா பிரச்சாரம் செஞ்ச எந்த ஒரு அபிவிருத்தியோ, propose பண்ணின அந்த solutions-ஓ அதுவும் இன்னும் நடக்கல. ஊரு எப்படி இருந்துச்சோ அப்படித்தான் இருக்கு. ஊர்ல தனிநபர்கள் மட்டும் ஒரு முன்னேற்றம் கொண்டு வாறாங்க, ஊர் ரீதியா எந்த ஒரு மாற்றமும் இல்ல.
சரி, இப்ப விடயத்துக்கு வருவோம்.
நான் ஒரு சுயநலமான சிந்தனை உள்ள ஆள். என்னப் பொறுத்தமட்டுல, இந்த ஊரு, இந்த மண்ணாங்கட்டி இதெல்லாம் எங்கட வாப்பா பார்க்கத் தேவையில்ல. எங்கட family, எங்கட விஷயங்களை மட்டும் பார்த்தா காணும்.
ஒரு அரசியல்ல ஒருவர் போனா, அவருட குடும்பம், அவருட விஷயங்கள் வளர்ச்சி அடையிறத நம்ம எல்லாரும் பார்ப்போம். அரசியலுக்குப் போறதுக்கு முதல்ல இருந்தத விட, போனதுக்குப் பிறகு அவர்கள்ட்ட நிறைய improvement, வளர்ச்சிகள் இருக்கும். ஆனா எங்கட குடும்பத்த எடுத்தீங்கன்னு சொன்னா, அரசியலுக்குப் போன பிறகு வந்த இழப்புகள் தான் அதிகம். அரசியலுக்கு முதல் இருந்த பல விடயங்கள், சொத்துக்கள் எல்லாம் இழப்புகள்தான், அதை இழந்ததுதான் அதிகம்.
ஆனா இந்த election-க்குப் பிறகு, மீண்டும் எங்கட குடும்பத்துல எங்கட வாப்பாவால இழந்த விடயங்களை விட திரும்ப Grow ஆக start ஆகி இருக்கு. கடன் எல்லாம் இல்லாம ஆகி (Thanks to blood relations) ஏனெண்டா, எங்கட வாப்பா இப்ப அரசியல்ல மும்முரமா ஈடுபடுறதில்ல. எங்கட வாப்பாவோட முழு focus-உம் எங்கட family-க்கு வந்துட்டு.
இதுதான் எனக்குத் தேவைப்பட்டுச்சு.
இதனாலதான் நான் வாப்பாவோட அரசியல விரும்பவே இல்ல. ஏனெண்டா, அரசியல் எங்கட வாப்பாக்கு பொருத்தமில்ல. இல்ல அரசியலுக்கு எங்கட வாப்பா பொருத்தம் இல்ல ஏனென்றால் அரசியல்ல வாப்பாக்கு பொய் சொல்லத் தெரியாது. ஏமாத்தத் தெரியாது. ஊழல் தெரியாது. களவெடுக்கத் தெரியாது. இன்னொரு ஆள்ற விஷயங்களை எடுக்கத் தெரியாது, அரசியல்ல இதை எதையுமே அவருக்கு செய்யத் தெரியாது.
இதை easy அ விளங்கப்படுத்துறதுக்கு நான் ஒரு சம்பவத்தைச் சொல்றேன்.
நான் ஒரு சின்னப் பிள்ளையா இருப்பேன், அன்னேரம் என்ட கையில ஒரு form fill பண்ண வேண்டிய சந்தர்ப்பம் வருது. அந்த form-ல கேட்டிருக்காங்க, உங்க வாப்பாவோட தொழில் என்ன அப்படின்னு. நான் politician அப்படின்னு fill பண்ணிட்டுப் போறேன். எங்கட வாப்பாட்ட form-ஐக் குடுத்து sign வாங்கப் போகும்போது, வாப்பா அந்த form-ஐப் பாக்குறாரு. பாத்துட்டுச் சொல்றாரு:
"இல்ல மகன், அரசியல் எனக்குத் தொழில் இல்ல மகன். நம்மட தொழில் parts விக்கிறது, அந்த parts கடையப் போடுங்க" அப்படின்னு சொல்றாரு. அப்ப நான் businessman அப்படின்னு போட்டுக் கொண்டேன்.
இது ஒரு சின்னப் பருவத்துல. இப்ப அதை யோசிக்கும்போதுதான் விளங்குது, உண்மையாவே எங்கட வாப்பாக்கு அரசியல் தொழில் இல்ல; அவருக்கு அரசியல் பொருத்தமும் இல்ல.
இப்ப நீங்க யோசிச்சுப் பாருங்க, தோத்தது எங்கட வாப்பாவா, இல்ல அந்த ஊராண்டு?
என்னப் பொறுத்தமட்டுல அந்த ஊர்தான் தோத்துச்சு. அந்த ஊர்ல எந்த ஒரு மாற்றமும் இல்ல. ஆனா எங்கட family-யில ஒரு positive ஆன change இருக்கு எங்கட வாப்பாவால.
இதுதான் எண்ட வாப்பா; வாப்பா பத்தி நிறைய எழுத இருந்தாலும் எல்லா விடயங்களும் இந்த இடத்துக்கானது இல்லை இது இன்டைக்கு இங்க போடணும் என்று தோணிச்சு போட்டிருக்கிறேன் ஏனென்றால் ஒரு முக்கியமான நாள் இது.
Share this article
Generate a story card or copy link to clipboard
