முகம்+மூடி

எத்தனை மனிதர்கள்? எத்தனை முகங்கள்? ஒவ்வொரு முகத்திற்கும் ஒரு கதை. ஒவ்வொரு கதைக்கும் பின்னாலும் பல வலிகள், சிரிப்புகள், உணர்வுகள், அத்துடன் முகமூடிகள். ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு முகமூடி...
சிரிக்க ஒரு முகமூடி, அழ ஒரு முகமூடி, கவலைக்கு ஒரு முகமூடி, காதலுக்கு ஒரு முகமூடி, வீட்டில் ஒரு முகமூடி, வேலைக்கு ஒரு முகமூடி, வேலையாக ஒரு முகமூடி, தனிமையில் ஒரு முகமூடி எனப் பல.
இந்த முகமூடியைக் கழற்ற ஒரு முகம் தேடி ஒரு ஓட்டம்; கோடியில் ஒரு முகம் காணும் தேடல் இது. முகமூடி கழற்றவே முழு மூச்சாய் ஒரு ஓட்டம். "போதும் இந்த முகமூடி, நான் இனிமேல் நான் தான் டி" என்று சொல்ல ஒரு முகம். காதலுக்கு அணிந்த முகமூடியையும் களவாடும் ஒரு முகம். கண்டவுடன் நின்று விடும் ஓட்டமல்ல இது; கண்டவுடன் தான் துவங்குகிறது.
அந்த முகத்துடனும் முகமூடி அணியும் வரை அந்த ஓட்டம் தொடரும். சில நேரம் அந்த முகமூடியை முக்காடாய் மற்றவர் போட்டு மூடுவர், சில நேரம் நாமே போட்டு மூடுவோம்.
என்னதான் இருந்தாலும் மறைக்கப்பட்ட முகங்கள் எல்லாம் ஒரு தனி அழகு; முக்காடோ முகமூடியோ...
Share this article
Generate a story card or copy link to clipboard

Saadh Jawwadh
Why Sri Lanka Must Confront Its Commercial Hate-Bait Network
Exclusivity is necessity; not a choice.